Tamil literature UPSC Optional Syllabus ,Books and toppers strategy – Balachander, Lakshmana Perumal and Madhubalan

.

Download the Class flow here 

Feedback about the classes : 

To enroll: Click Here

Download Sample notes : Click Here

TAMIL OPTIONAL SYLLABUS

To Download the syllabus – click here

TAMIL OPTIONAL BOOK LIST – Click Here

 

 

TAMIL OPTIONAL STRATEGY BY TOPPERS

தமிழ் முதல் தாள் – அணுகுமுறை – திரு . லட்சுமண பெருமாள் ( மதிப்பெண் – 210 / 250 – 1st mark in Paper 1 )

1 . படிக்கும் பொழுது syllabus வைத்து அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் . 

2 . மறக்கக் கூடியவற்றை குறிப்புகளாக எடுத்துக்கொண்டு திரும்ப திரும்ப நினைவுபடுத்துதல் அவசியம்.

3 . படித்த புத்தகங்களைத் திரும்பத் திருyம்ப படிக்கும்போதும் , மாதிரித்தேர்வுகள் எழுதும் போதும் நினைவாற்றல் கூடும் .

4 . கால அடிப்படையில் தமிழ் படிக்கும்போது , தமிழ் இரண்டாம் தாள் உதவியாக இருக்கும் . பெயர்ச்சொல் , வினைச்சொல் , வேற்றுமை உருபுகள் , கால இடைநிலைகளுக்கான எடுத்துக்காட்டுகளை  பாடப்பகுதியில் இருந்தே எழுதலாம் . 

5 . Tamilvu இணையதளம் அதிக தரவுகளைக் கொண்டிருக்கிறது [ கதைப்பாடல்கள் – அதன் சான்று , தமிழர் நம்பிக்கைகள் , சடங்குகள் ஆகியவற்றிற்குச் மிகச் சிறந்த source tamilvu ]

6 . தேர்வின் பொது ஆரம்பத்தில் இருந்து விடை அளிப்பது நன்று. ஆரம்பத்தில் அனைவர்க்கும் நல்ல கையெழுத்து இருக்கும் . நல்ல தொடக்கம் திருத்துபவர்க்கு நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் .

7 . கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு விடையளிக்க வேண்டும், 

உதாரணத்திற்கு ‘ நவீன தமிழ் இலக்கியங்களில் அங்கதம் ‘ பற்றி எழுதுக என்ற கேள்வியில் நவீன இலக்கியம் என்பதே  முக்கியமான வார்த்தை . இங்கு சங்க இலக்கிய உதாரணங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை . 

மேலும் கேள்விக்கான பதிலை பரந்துபட்ட அளவில் எழுதுவது (diversified and broad view ) அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும் .  

8 . மேற்கோள்கள், எடுத்துக்காட்டுகள் பதிலுக்கு அவசியமானவை . உங்களின் பதிலைப் பிறரிடம்  இருந்து வேறுபடுத்தும் மிக முக்கியமானவை இவையே . 

9 . ஊடகம் , மொழிபெயர்ப்பு பற்றிய கேள்விகளுக்கு நடப்பு நிகழ்வுகளைச் சான்றுகளாக எழுதலாம் . எடுத்துக்காட்டு : அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி பொறியியல் படிப்பு , மொழிபெயர்ப்பின் மூலமே சாத்தியமானது ; செய்தித்தாள் மூலம் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக விருதுநகர் மாவட்ட சிறுவன் ஆசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றான் – பண உதவி கிடைத்தது . 

10 . முடிந்த கேள்விகளுக்கு உட்தலைப்பு தரலாம் . தேவையான கேள்விகளுக்கு point wise பதில் அளிக்கலாம் .

11 . கொடுக்கப்பட்ட அனைத்து பக்கங்களையும் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை . நேரம் , கேள்விக்கான பதில் , கடினத்தன்மை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .  

ஒரு சிறிய சான்று :

‘ நவீன தமிழ் இலக்கியங்களில் அங்கதம் ‘ 

இக்கேள்வியை படித்தவுடன் பல விதமான அங்கதக் கவிதைகளே ஞாபகத்திற்கு வரும். வெறும் கவிதைகளில் உள்ள உதாரணங்களை மட்டும் காட்டாமல் அதையும் தாண்டி நம் சிந்தனை செல்கிறதா என்பதை ஆராயவே இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது . 

பதில்  :

நாடகத்தில் :

‘யாருக்கும் வெட்கமில்லை ‘ நாடகத்தில் இருந்து ஒரு உதாரணம் 

கவிதையில் :  

‘ மருமக்கள் வழி மான்மியம் ‘ – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய அங்கதக் கவிதை நூலில் இருந்து ஒரு நிகழ்ச்சி . 

புதுக்கவிதையில் : 

‘அன்புடைமை’

அதிகாரம் நடத்துகிறார் 

ஆசிரியர் – கையில் பிரம்புடன் .

சிறுகதையில் :

ஜெயகாந்தன் ‘குருபீடம்’ ஒரு சான்று 

 

மற்றொரு சான்று : 

சங்க இலக்கியங்களில் உலக பொதுமை (10 )

10  மார்க் கேள்விக்கு பதிலளிக்க சராசரியாக 6 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம் .   இந்த 6 நிமிடங்களில் நம்மால் முடிந்த வரை பல சங்க இலக்கியங்களில் இருந்து இக்கேள்விகளுக்குப் பொருந்துமாறு  செய்திகளை யோசித்து , அதை கோர்வையாக எழுதும் பயிற்சி வேண்டும் . 

 

மேற்கண்ட கேள்விக்கு திரு.லட்சுமண பெருமாள் அவர்கள் எழுதிய பதிலின் சுருக்கம் : 

 

1 . குறுந்தொகை – காதல் போற்றும் தன்மை , இயற்கை நிகழ்விற்கு முக்கியத்துவம் ( முதற்பொருள் , கருப்பொருள் )

2 . புறநாநூறு – சமயசார்பற்றத்தன்மை , கல்விக்கு முக்கியத்துவம் , ஈதல் தன்மை ( செல்வத்துப் பயனே ஈதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் 

3 . நற்றிணை – முந்தை இருந்து நாட்டோர் குடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்

4 . கலித்தொகை – பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் , அன்பெனப்படுவது தன்கிளை செறா அமை

5 . ஆற்றுப்படை – பிறர்க்கு வழிகாட்டும் தன்மை 

 

தமிழ் இரண்டாம் தாள் அணுகுமுறை – மதுபாலன் ( 152 / 250 – 1st mark in paper 2)

இரண்டாம் தாளின் கேள்விகள் அனைத்தும் தேர்வு எழுதுபவரின் திறனாய்வு ஆற்றலை கண்டறியும் வகையில் அமைந்து இருக்கும் . 

இத்தாளின்  பாடப்பகுதிகளையும் அவற்றின் அணுகுமுறைகளையும் பின்வருமாறு :

 

1 . பழந்தமிழ் இலக்கியம் – 

    – புறநானூறு : ஒவ்வொரு வருடமும் ஒரு 15 மார்க் கேள்வி நிச்சயம். ஆகையால் பாடல்களை எழுதி பயிற்சி செய்து எழுத்துப்பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . திருக்குறளில் இருந்து குறட்பாக்களை தேர்வு செய்து  புறநானூறு பாடல்களுக்கு மேற்கோளாகக் காட்டலாம் . பாடல்கள் இயற்றிய புலவர்களின் பெயர் , பாடல் துறைகள் போன்றவற்றை நினைவில் கொண்டு தேர்வில் எழுதுவது மதிப்பெண்களை அதிகப்படுத்தும் .

   – குறுந்தொகை : மிகவும் ரசித்து படிக்க வேண்டிய பாடப்பகுதி.  ‘ இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக ‘ பகுதியில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு . ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற குறள் அல்லது அறிஞர்களின் மேற்கோள்கள் ஆகியவற்றை சேகரித்து பாடலின் நயத்தை போற்றி  எழுதினால் நல்ல மதிப்பெண் உறுதி .

   – திருக்குறள் : கொடுக்கப்பட்டுள்ள 35 அதிகாரங்கள்  பரிட்சைக்கு மட்டுமல்ல , வாழ்க்கைக்கே உதவுவது . ஒவ்வொரு அதிகாரத்திலும் 4 அல்லது 5 குறட்பாக்களை மனனம் செய்து கொள்ள வேண்டும். ஒரு அதிகாரத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை புரிந்து சுயமாக சிறு குறிப்புக்கள் செய்துகொண்டால் revision செய்யும் பொழுது எளிதாக இருக்கும். மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது திருக்குறள் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் , குறளினை வெவ்வேறு இடங்களில் மேற்கோள் காட்டும்போது உங்கள் பதிலின் தரம் உயரும். ஆகவே நண்பர்களே  குறளினைப் படிப்பதற்கு தயங்க வேண்டாம் , செலவிடப்படும் நேரத்திற்கான பயன் உங்களை நிச்சயமாக வந்தடையும் .

2 . காப்பியம் : 

   – சிலப்பதிகாரம் : மதுரைக் காண்டம் மட்டுமே syllabus – இல் உள்ளது . ஒவ்வொரு காதையிலும் சில முக்கியமான வரிகளை மனப்பாடம் செய்துகொள்ளவும் . ஒவ்வொரு காதையையும் படித்தபின்பு , அக்காதையின் நிகழ்ச்சிப் போக்கினை குறிப்பு எடுத்துக்கொண்டால் ஞாபகம் வைத்துக்கொள்ள எளிதாக இருக்கும் . சிலப்பதிகார திறனாய்வு –  Dr. Ma.Po.சிவஞானம் , சிலப்பதிகார சிந்தனைகள் : சு செல்லப்பன் போன்ற புத்தகங்களில் இருந்து தரவுகள் எடுத்துக் கொள்ளலாம் . தமிழ் ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்த பகுதி ஆதலால் , சிலப்பதிகார கேள்விகள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தருவதாக அமையும் . ஆகவே திருக்குறளுக்கு நிகரான உழைப்பினைச் செலுத்த வேண்டிய பகுதி இது.

  – கும்பகர்ணன் வதைப்படலம் : இதுவரை தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில்களை தயார் செய்துகொள்ளுங்கள் . மிகக் குறைவான பாடல்களை மனப்பாடம் செய்தால் போதுமானது . கம்பன் காட்டும் கும்பகர்ணன் – புலவர் அருணகிரி என்ற புத்தகம் சிறந்த திறனாய்வு . ஒரு முறை படித்து குறிப்புக்கள் எடுத்துக்கொள்ளவும் . 

 

3 . பக்தி இலக்கியம் : 

 

   – திருவாசகம் : பழைய கேள்வித்தாள்களை  புரட்டிப்பார்த்தால் இடம் சுட்டி பொருள் தருக பகுதியில் 

என்ன என்ன பாடல்கள் கேட்கப்பட்டுள்ளதோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் தரவும். ஏற்கனவே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில்கள் தயாரித்து வைத்துக்கொண்டாலே போதும் , எந்த கேள்வி வந்தாலும் இந்த பதில்களை மாற்றி மாற்றி எழுதி சமாளித்து விடலாம். 

   – திருப்பாவை : – இலக்கிய நயம் வாய்ந்த பகுதி.  மொத்தமே 30 பாடல்கள். மனனம் செய்வதும் எளிது. எனவே 15 பாடல்களாவது மனனம் செய்து கொள்ளவும் . ஆண்டாள் பற்றிய சாகித்ய அகாடமி – இன் சிறிய புத்தகத்தில் இருந்து சில நல்ல குறிப்புகளை எடுத்துக்கொள்ளலாம் . மனப்பாடம் செய்த பாடல்களின் ஒவ்வொரு வரியையும் நயம் பாராட்ட கற்றுக்கொள்ளவும் . திருப்பாவை கேள்விகள் எளிதாக அதிக மதிப்பெண்களை பெற்றுத்தரும். எனவே கொஞ்சம் கூடுதல் உழைப்பினைப் போடுவதில் தவறில்லை . 

 

  1. கவிதை

      – கண்ணன் பாட்டு : ஒவ்வொரு தலைப்பில் உள்ள பாடலும் ஒரு கேள்வி என எடுத்துக்கொள்ளலாம் . கண்ணன் என் தோழன் முதல் கண்ணன் என் காதலன் , காதலி தவிர்த்து 11 தலைப்புகளுக்கு , 15 மார்கில் கேட்டால் எழுதுவதற்கு தகுந்தாற் போல் பதிலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும் . காதலன் காதலி தலைப்பிற்கு நான்கு பக்க notes எடுத்து வைத்துக் கொண்டால் அதில் இருந்து எத்தகைய கேள்வி வந்தாலும் பதில் அளித்துவிடலாம். 

    – குடும்ப விளக்கு : சுவாரசியமான பகுதி. நிறைய கேள்விகள் கேட்பதற்கு scope உள்ள பகுதி ஆதலால் கதைப்போக்கினை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் . ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேடிய பின்பு வேறு என்ன கேள்விகள் இப்பகுதியில் இருந்து கேட்க முடியும் என்று சிந்திக்க வேண்டும் . 2017 mains – இல்  கேட்கப்பட்ட ‘ மாமி மருமகள் உறவு குடும்ப விளக்கில் எவ்வாறு வருணிக்கப்படுகிறது?’ என்ற கேள்வி புதிது . முன்னரே சிந்தித்து வைத்து தயார் செய்துகொள்ளவில்லையானால் இது போன்ற புதிய கேள்விகளை தேர்வு அன்று எதிர்கொள்வது கடினமாகிவிடும் .

   – கறுப்பு மலர்கள் : தற்கால நடையில் எழுதப்பட்டு உள்ளதால் மனனம் செய்வது எளிது . கவிதையின் தலைப்பை யாராவது உங்களிடம் கூறினால் உடனே அதனுள் உள்ள content என்ன என்பதை crisp – ஆக கூறும் வண்ணம் தயார் செய்துகொள்ளவும். 10 மார்க் கேள்வியில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு .

 

5 . உரைநடை 

       – அறமும் அரசியலும் : எத்தனை முறை படித்தாலும் படிக்காததை போலவே இருக்கும் புத்தகம் . எந்த தலைப்பின் கீழ் என்ன வருகிறது என்பதை நினைவில் கொள்ள முடியாத வண்ணம் பல குழப்பங்கள் வரும் . பழைய கேள்விகளுக்கு பதில் திரட்டவும் . இப்பகுதியில் இருந்து வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் நல்ல மதிப்பெண்ணை எதிர் பார்க்க முடியாது . ஆகவே முடிந்த வரை இப்பகுதியில் இருந்து வரும் கேள்வியை choice – இல் விட்டுவிடுவது நல்லது .

      – தாழ்ந்த தமிழகமே : மொத்தமே 40 பக்க புத்தகம் . நன்றாக படித்து புரிந்து கொண்டு 10 பக்கமாக சுருக்கிக்கொள்ள வேண்டும் . அண்ணாவை பற்றிய கூடுதல் தகவல்கள் , மக்களாட்சி மன்னராட்சி பற்றி பெருந்தலைவர்களின் கருத்துகள் ஆகியன கூடுதல் மதிப்பெண்களை உறுதி செய்யும் .

 

6 . நாவல் சிறுகதை நாடகம் 

     – சித்திரப்பாவை : விருப்பத்துடன் இக்கதையை இரண்டு முறை படித்தாலே போதும். எப்படிப்பட்ட கேள்விக்கும் பதில் தந்துவிட முடியும் .  கதைமாந்தர்களின் பெயர்கள் , குறிப்பிட்ட வசனங்கள் போன்றவற்றை மாற்றி எழுதிவிடாமல் கவனத்துடன் இருக்க வேண்டும் . வரும் வருடங்களில் இப்பகுதியில் இருந்து புதிய கேள்விகளை நிச்சயம் எதிர் பார்க்கலாம் .

   – குருபீடம் :  ஒவ்வொரு கதைக்கும் முன்னுரை, முடிவுரை , முக்கியமான வசனங்கள் , கதையோடு ஒத்துப்போகும் பழமொழிகள் போன்றவற்றை தயார் செய்தாலே போதுமானது . 

   – யாருக்கும் வெட்கமில்லை : இக்கதையோடு ஒத்துப்போகும் கவிதைகளை இணையத்தில் தேடலாம் . சில வசனங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் , அதை அப்படியே எழுதலாம் , தவறில்லை . 

 

7 . நாட்டுப்புற இலக்கியம் 

    – முத்துப்பட்டன் கதை : பழைய கேள்விகளுக்கு பதில் தயார் செய்தாலே போதும். அதை தாண்டி புதிதாகக் கேள்விகள் வர வாய்ப்பில்லை . 

   – மலையருவி – 12 தலைப்புகள் . ஒவ்வொரு தலைப்பிலும் 5 அல்லது 6 பாடல்கள் மனப்பாடம் செய்வது போதுமானது .

Related articles

Comments

  1. Currently i am working in backing sector at mysore.i have planning to take tamil optional for my preparation . Plz guide me

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.